May 15

தமிழீழ விடுதலை இயக்க வவுனியா பொறுப்பாளரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமாக கிறிஸ்டி குகராஜாவின் (குகன்) 20 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு வவுனியா, வைரவப்புளிங்குளம் பகுதியிலுள்ள குகராஜாவின் நினைவுத் தூபியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இந்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபைத் தலைவர் து. நடராஜசிங்கம், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.