May 15

யாழ் கொக்குவிலில் கூரிய ஆயுதங்கள் மீட்பு…

இன்று காலை கொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து அந்த வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூரப்படுகின்றது.இதேவேளை இந்தச் சோதனை நடவடிக்கை தொடர்பில் அந்தப் பகுதி மக்களுக்கு இராணுவத்தினரால் முன்னறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவருடைய வீடே இவ்வாறு சோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.