Jul 14

காணாமல்போன பழங்குடியின மக்களை விசாரணை செய்யும் குழுவின் ஆணையாளர் பதவி விலகல்

காணாமல்போன மற்றும் கொல்லப்பட்ட பழங்குடியின மக்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் வின் ஆணையாளர் மார்லின் பொய்ட்ராஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகல் முடிவுக்கான காரணத்தினை குறிப்பிட்டு மார்லின் பொய்ட்ராஸ், பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.

இந்த விசாரணைகளுக்காக தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பின் கீழ், ஒரு ஆணையாளராக தனது கடமைகளை நிறைவேற்ற முடியாதுள்ளதனை தன்னால் தெளிவாக உணர முடிவதாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியில் இருந்து தான் இந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர் மேலும்; குறிப்பிட்டுள்ளார்

கடந்த கோடை காலத்தில் லிபரல் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவில் இவரும் ஒருவராவார்.