Mar 25

டியு. குணசேகரவின் காலம் கடந்த ஞானம்

நாடு சுதந்திரம் அடைந்து எழுபது வருடங்களை அண்மித்தும் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை ஏற்படுத்த முடியாமல் போயுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

 

அதனால் அனைத்து கட்சிகளும் அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதை சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

 

அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.

 

தற்போது அமுலில் இருக்கும் 78ஆம் ஆண்டுஅரசியலமைப்பு ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் தயாரித்ததாகும்.

 

இந்த அரசியலமைப்புக்கு இடதுசாரிகளான நாங்கள்தான் ஆரம்பமாக எதிர்ப்பு கூட்டங்களை நடத்தினோம். அத்துடன் கலாநிதி என்.எம்.பெரேரா இந்த அரசியலமைப்பை விமர்சித்து புத்தகம் ஒன்றை எழுதினார்.

 

அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்ட அனைத்து விடயங்களும் தற்போது உண்மையாகியுள்ளன. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து இன கட்சிகளும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றின.

 

அதனடிப்படையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கு குழுக்கள் அமைத்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து.


சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது. ஆனால் சட்டமூலம் தயாரிக்கப்பட முன்பே அரசியலமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.


அரசியலமைப்பில் ஏற்படுத்தக்கூடிய திருத்தத்தில் யாருக்காவது பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால் அதனை பாராளுமன்றத்தில் முன்வைத்து அது தொடர்பாக திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றார். 


இதே டி.யு.குணசேகர மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சுப்பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது