Jul 14

அமெரிக்க ஜனாதிபதிக்கு பிரான்ஸில் அமோக வரவேற்பு

பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் வரவேற்றுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்ட ட்ரட்ப், அமெரிக்கா மற்றும் பிரான்ஸிற்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இன்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இன்று பிரான்ஸில் நடத்தப்படவுள்ள தேசிய தின அணிவகுப்பிலும் ட்ரம்ப் கலந்துகொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இரு தலைவர்களும் நேற்று பிரான்ஸ் மற்றும் அமெரிக்க தேசிய கீதங்களை இசைக்கும் போது மரியாதை செலுத்தியதுடன், பிரான்ஸில் உள்ள படைவீரர்களையும் நேரில் சந்தித்துள்ளனர். அத்துடன், அங்குள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்கும் அவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.