Jul 14

இந்தியாவில் நோக்கியா 6 முன்பதிவு துவங்கியது: விற்பனை தேதி மற்றும் முழு தகவல்கள்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 பிளாஷ் விற்பனைக்கான முன்பதிவுகள் பிரத்தியேகமாக அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு 23-ம் தேதி நோக்கியா 6 பிளாஷ் விற்பனை செய்யப்படும் என எச்.எம்.டி. குளோபல் தெரிவித்துள்ளது.

நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 போன்று இல்லாமல் எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 

நோக்கியா 6 அறிமுக சலுகைகள்:

இந்தியாவில் நோக்கியா 6 விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக அமேசான் இந்தியா நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1000 கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது.

எனினும் கேஷ்பேக் சலுகை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 10 ஜிபி டேட்டா ரூ.249 விலையில் ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் நோக்கியா 6 வாங்குவோருக்கு கின்டிள் இ புத்தகங்களில் 80 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் மேக்மைட்ரிப் தளத்தில் ரூ.2500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 


நோக்கியா 6 சிறப்பம்சங்கள்:


* 5.5-இன்ச் ஃபுல்-எச்டி 2.5D திரை

* கைரேகை ஸ்கேனர் 

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் 

* ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்

* 3 ஜிபி ரேம்

* 32 ஜிபி மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* 3000 எம்ஏஎச் பேட்டரி

* 16 எம்பி பிரைமரி கேரா

* 8 எம்பி செல்ஃபி கேமரா