Mar 25

பிரதமருக்கு வாழ்த்துக் கூறிய மகிந்த

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க மீதான  அனுதாப பிரேரணையில் உரையாற்றிய போது  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆசனத்தில் அமர்ந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்லவினால் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க மீதான அனுதாப பிரேரணையை சமர்ப்பித்தார்.

இப்பிரேரணையில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் போது,

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும் தற்போதும் அரசியல் பழிவாங்கலின் அடிப்படை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.அவர் ஹொரனை மக்களுக்காக பாடுப்பட்டவராகும்.

இதன்படி அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தை தெரிவிக்கின்றேன் என்று உரையை நிறைவு செய்தவுடன் முன் அமர்ந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்தார்.