Jul 14

ஏழு ஆண்டுகளின் பின்னர் வட்டி வீதம் அதிகரிப்பு

சுமார் ஏழு ஆண்டுகால இடைவெளியின் பி்னனர், வட்டி வீதத்தனை அதிகரிக்கும் முடிவினை கனேடிய மத்தியவங்கி நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இதுவரை காலம் 0.5 சதவீதமாக இருந்த வட்டிவீதம், தற்போது 0.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டிலேயே இவ்வாறான வட்டி வீத அதிகரிப்பினை மத்திய வங்கி அறிவித்தமை குறிப்பிடத்த்ககது.

பல ஆண்டுகளின் பின்னர் தற்போது இந்த வட்டிவீத அதிகரிப்பு வெளியிடப்பட்டுள்ளமையானது, கனேடிய பொருளாதாரத்தில் பலமான முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவானது நாட்டின் பொருளாதாரத்தினை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் என்று, ஒட்டாவாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில கருத்து வெளியிட்ட மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்க காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது காணப்படும் ஏற்றுமதி மற்றும் வர்த்தக நிலைமைகள் உள்ளிட்ட பொருளாதார நிலவரங்கள், பொருளாதார மேம்பாட்டுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னைய வரலாறுகளுடன் ஒப்பிடுகையில் வட்டிவீதம் இன்னமும் குறைவான அளவிலேயே காணப்படுவதாகவும், இது இன்னமும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்கு கனேடியர்கள் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.