Mar 25

ஐ.நா.பிரேரணை ஆபத்தனாது; ஜனாதிபதியை தலையிடுமாறு கோருகிறார் தயான்




இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையில் நிராகரிக்கபட்ட அனைத்தையும் இரண்டாம் கட்டத்தில் நிறைவேற்றவும், புலிகள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவுமே தற்போது பொறுப்புக் கூறல் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறேசென தலையிட்டு இந்த நகர்வை  தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த பயணம் சர்வதேச விசாரணையில் வந்து முடியும் என கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்தார்.