Mar 25

ஐ.நா பிரேரணை தமிழீழத்தை உருவாக்க வழி வகுக்கும்; தே.தே.இயக்கம்

ஐ.நா வழங்கிய கால அவகாசம் இலங்கைக்கு “விரிக்கப்பட்ட சதி வலை” எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகள் இலங்கை தொடர்பாக முன்வைத்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால் “தனித் தமிழீழம்” உருவாகும் என்றும் குறிப்பிட்டது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்;

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு இலங்கை தொடர்பான பிரேரணையின் விடயங்களை நிறைவேற்ற இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது. இது இலங்கைக்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல இலங்கைக்கு விரிக்கப்பட்ட சதிவலையாகும்.

இச் சதிவலையில் சிக்கிக் கொண்டால் சர்வதேச நீதிபதிகள் இலங்கை வருவார்கள். பிழை செய்த இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு எமக்கு பாதகமான நிலைமையே ஏற்படும். அத்தோடு மனித உரிமை ஆணையாளரின் உரையில் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக நிலையான அலுவலகம் செயற்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.