May 10

தமிழருக்குப் புதிதல்ல...! பகலவன்

இடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்பம், யுத்த சூழல் என்றேஇருந்ததால், அனர்த்த முகாமைத்துவத்தில் கைதேர்ந்தவர்களாக விளங்கினர் தமிழர். யுத்தம்பல்வேறு வகையிலும் அவர்களை ஆற்றலுள்ளவர்களாக மாற்றிவிட்டது. இதனால்தான் சுனாமிபோன்ற மனிதப் பேரவலத்தின் பிடியில் இருந்து மிக விரைவில் சுதாகரிக்க முடிந்தது.

உலகிலேயே மிக வேகமாக மீட்புப் பணிகள் தமிழரின் நிர்வாகப் பகுதியிலேயே (குறிப்பாகபுலிகளின் நிர்வாகத்தில் இருந்தவை) நடைபெற்றன.கடல், வான், தரை என மூன்று வழியிலும் தாக்குதல்களை எதிர்கொண்ட போதும்,அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த அனுபவம்தான்இதுவும் கடந்து போகும்என்றஞானநிலையை முள்ளிவாய்க்கால் வரை ஏற்படுத்தியது. தொடர்ந்து முகாம் வாழ்க்கையின்துன்ப, துயரங்களையும் எதிர்கொள்ள முடிந்தது. இவ்வாறான நிலையை சிங்களவர்களோ,முஸ்லிம்களோ எதிர்கொண்டிருப்பார்களாயின் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல்போயிருக்கலாம்.

இன்று நாடு முழுவதும் பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பாக முடிவெடுப்பதில், சகலரும்திணறுகின்றனர். இது புதிய விடயம் என்பதால் சிங்களவரும் முஸ்லிம்களும் எதிர்கொள்வதைசிக்கல்களைச் சந்திக்கின்றனர். ஏற்கனவே மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே பாதுகாப்பு என்றபெயரில் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்தவர்கள் தமிழர்கள். ஆனாலும் தளரவில்லை.

அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதில் சிரித்திரன் சஞ்சிகை குறிப்பிடத்தக்கபங்கை ஆற்றியுள்ளது.

அக்காலத்தில் சிரித்திரன் சுந்தர் அட்டைப்படமாக ஒரு கேலிச்சித்திரத்தை வரைந்திருந்தார்.

அவர் படைத்த பாத்திரங்கள் அதில் காணப்படுகின்றன. கோவணத்துடன் போகிறார்மெயில்வாகனத்தார். அவரிடம் மெயில்வாகனத்தார் குளிக்கப் போறியளோ... எனக்கேட்கிறார் சவாரித்தமபர்.

இல்லை... கொழும்புக்குப் போறன். வழியில் எல்லாம் திறந்து பார்க்கிறார்களாம்... அதுதான்இப்படி..., என்று பதில் சொல்கிறார் மெயில்வாகனத்தார். நாளாந்தம் இந்த அவஸ்தையைதமிழர்கள் மனதில் வித்தியாசமான நகைச்சுவை உணர்வு ஏற்பட்டது. அதன்பின் இதனைசர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ள இந்தக் கேலிச்சித்திரமும் ஒருவகையில் உதவியதுஎனலாம்.

வசாவிளான் மகா வித்தியாலத்துக்குள் இராணுவம் பிரவேசித்து விட்டது என்ற செய்தி வந்தது.எல்லோரும் இராணுவ நெருக்கடி பற்றி சிந்திக்கையில் இவரது கேலிச்சித்திரம் இயல்புநிலைக்குப் போக வைத்தது. பள்ளிக்கூடத்துக்கை ஆமி வந்திட்டுதாம்... என்று ஒருவர்சொல்ல, சந்தோசம்... சகோதரங்களுக்கு இப்பவாவது படிக்கிற ஆசை வந்ததே... என்றுமற்றவர் சொல்கிறார். இவ்வாறாக பல்வேறு நடவடிக்கைகளுக்கும் இவர் பாணி வெவ்வேறானவிளக்கங்களைக் கொடுத்தது.

1986 - 1987 காலகட்டத்தில் ஒருநாள் குண்டுவீச்சு விமானங்கள் நகரை வட்டமிடத் தொடங்கின.

இவரது மகள் இவரை அழைத்துக் கொண்டுபோய் இவர்களது காணிக்குள்அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழிக்குள் விட்டார். விமானங்கள் தமக்கிட்ட கடமையைசெவ்வனே நிறைவேற்றி (தமிழருக்கு உயிரிழப்பு, சேதாரம்) விட்டு சென்று விட்டன. இதன் பின்இவர் பதுங்குகுழியில் இருந்து வெளியில் வந்தார். அடுத்த சிரித்திரன் இதழ், அட்டைப்படம்இச்சம்பவத்தை மையமாக வைத்து வெளியானது. ஒரு சாத்திரியாரிடம் ஒருவர் தனது பலனைஅறிய கையை நீட்டுகிறார். சாத்திரியார் சொல்கிறார், செல்வம் அனுபவிக்கும் பலனில்லாதசாதகன் என்று. அதற்கு அவர், உண்மைதான் சாத்திரியார் மாடி வீடு கட்டிவிட்டுபதுங்குகுழியில இருக்கிற பலன் என்று சொல்கிறார். (காங்கேசன்துறை வீதியில் இருந்தஇவரது இல்லம் மாடி வீடுதான்)இப்போது எழுந்துள்ள சோதனைகள் எல்லாம். தமிழருக்குப் பழக்கமானவையே இதனையும்வழமைபோலவே பார்க்கின்றனர். சமூகவலைத்தளங்களில் ஒரு கவிதை உலா வருகிறது.

அதற்கு விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. அப்படியே தருகிறோம். எழுதியவர் யார் எனத்தெரியவில்லை. சோதனை விடயங்களில் நல்ல அனுபவஸ்தர் என்று மட்டும் புரிகிறது.


ஒரு பை வேணும்

ஐயா பை ஒன்று தாங்கோ

படு கறுப்பும் வேண்டாம்

பஞ்சவர்ணத்திலும் வேண்டாம்

பின்னுக்கு கொழுவுறதும் வேண்டாம்

பெரிதாயும் வேண்டாம்

ஆகச் சிறிதாயும் வேண்டாம்

ஆங்கிலம் அரபு

எழுத்துப்போட்டதும் வேண்டாம்

இழுத்துப் பூட்டுறதும் வேண்டாம்

ஆக ஓவெண்டும் வேண்டாம்

அப்பட்டமாய் உள்ளே எல்லாம்

அம்பலத்தில் தெரியிற மாதிரி

புட்டோ இடியப்பமோ

போண்டாவோ இட்டலியோ

கட்டிய பார்சலும்


தட்டிப்பார்க்காலே

தரணிக்கே தெரியும்படியாய்

ஒரு தட்டி மறைப்பு இல்லாமல்

குஞ்சம் கொடிகள் இல்லாமல்

குறிகள் குற்றுக்கள்

பறவைகள் மிருகங்கள் இல்லாமல்

வெறுமனே ஒரு பை

திறந்து பார்க்காமல்

கொடிகாமத்திலிருந்து பார்த்தால்

கைதடி சந்திக் கைப்பையில்

அடியில் இருக்கின்ற

அரை இஞ்சி ஊசியும்

தெளிவுறக் காண்பதுவாய்

ஐயா ஒரு பை வேணும்

இல்லையெனில்

தையல் கூலி ஒரு

ஐந்து பத்து இலட்சம்

ஆனாலும் பரவாயில்லை

உள்ளே இருப்பதை

உலகமே பார்க்கும் படியாய்

மெய்யாய் ஒரு பை வேணும்

இப்போதைக்கு இதுபோதும்

இனியும் நாளை ஏதுமென்றால்

எனக்கும் என் மனையாளுக்கும்

பைபோல

ஒரு கவுணும் காற்சட்டையும்


தைத்து உதவவேணும்

இனியாரும் குண்டை

கொண்டைக்குள் காவி வந்தால்

மறுநாள் மக்கள் அனைவருக்கும்

மண்டை மட்டும்தான் இருக்கும்

மசிர் இருக்காது

இண்டைய நாட்டு நிலைமையில்

இப்படித்தான் யோசிக்கவேணும்