Jul 13

சாம்சங் கேலக்ஸி நோட் 8: புதிய வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள்

சாம்சங் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி நோட் 8 சார்ந்து பல்வேறு லீக்ஸ் மற்றும் சிறப்பம்சங்கள் என தகவல்கள் தொடர்ச்சியாக இணையத்தில் கசிந்து வருகிறது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நோட் 7 மாடல் அந்நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு வெளியாக இருக்கும் நோட் 8 மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

அந்த வகையில் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஆகஸ்டு 23-ம் தேதி வெளியிடப்படலாம் என்றும் செப்டம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தைகளில் விநியோகம் செய்யப்படலாம் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாம்சங் சார்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் சாம்சங் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பின் கசிந்துள்ளதாக தென் கொரிய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் அதிகாரி வெளியிட்ட தகவல்களில் புதிய நோட் 8 மிகப்பெரிய திரை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  நோட் 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

* 6.3 இன்ச் AMOLED 1440x2960 பிக்சல் டிஸ்ப்ளே, 

* 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* முன்பக்க கைரேகை ஸ்கேனர்

* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட் 

* 6 ஜிபி ரேம் 

* 3300 எம்ஏஎச் பேட்டரி

* வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

சாம்சங் வழக்கப்படி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பெர்லின் நகரில் நடைபெறும் IFA விழாவிற்கு முன் வெளியிடும் நிலையில், புதிய சாம்சங் நோட் 8 விற்பனை செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. 

கேலக்ஸி நோட் 8 சாதனத்தில் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் போன்று இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.