Mar 25

பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் பத்மபிரியா..!

பத்மபிரியாவை அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. திருமணம் செய்துகொண்ட பத்மப்ரியா தொடர்ந்து சினிமாவில் நடித்தே தீருவேன் என அடம்பிடிப்பதும் இல்லை.. அதேசமயம் நல்ல வாய்ப்புகள் தேடிவரும்போது அதை நிராகரிப்பதும் இல்லை.. அப்படி தேடிவந்ததுதான் 'க்ராஸ் ரோடு' படத்தில் நடிக்கும் வாய்ப்பு.. மலையாள இயக்குனர் லெனின் ராஜேந்திரன் என்பவர் தற்போது ஆந்தாலஜி படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.. பத்து குறும்படங்களின் தொகுப்பாக உருவாகும் இந்தப்படத்திற்கு 'க்ராஸ் ரோட்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே படம் இயக்கி தங்களது திறமையை நிரூபித்த இயக்குனர்கள் தான் இந்த குறும்படங்களை இயக்குகிறார்கள்.. இந்த பத்து குறும்படங்களும் பெண்கள் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் பத்துவிதமான பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக இருக்கிறதாம். அதில் ஒன்றில் தான் பத்மபிரியா நடிக்கிறார். அவரது எபிசோடில் உருவாகும் 'ஒரு ராத்திரியுடே கூலி' என்கிற கதையில் அவர் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். இதை பிரபல இயக்குனர் மதுபால் இயக்குகிறார்..

குடும்பத்தின் வறுமை காரணமாக பாலியல் தொழிலுக்கு வரும் பத்மபிரியாவிடம், ஒருநாள் இரவு கஸ்டமர் ஒருவன் பணம் தராமல் ஏமாற்றிவிட, அன்றைய இரவு முழுவதும் தனக்கு தெரிந்த 'யாரிடமாவது' பணம் கிடைக்காத என அலைவதும் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்குவதும் தான் கதையாம். பத்மபிரியா மட்டுமல்ல, முன்னணி நடிகைகளான பார்வதி, மம்தா மோகன்தாஸ், இஷா தல்வார், ஸ்ருதி மேனன் உள்ளிட்டோர் இந்த குறும்படங்களில் நடிக்க ஆர்வமுடன் முன் வந்துள்ளார்களாம். அதற்கு காரணம்..