Jul 13

கனடாவின் 150வது வருட கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி

கனடாவின் 150வது வருட கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சு நடாத்திய 2ம் வருட தடகள விளையாட்டுப்போட்டி  ஜூலை 3ந் திகதி   Bill Crothers     பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 170க்கும் மேட்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

மார்க்கம் நகரசபை 7ம் வட்டார நகரசபை  உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.இவர் தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சி சம்பந்தமான விடயங்களிட்கு முன்னுரிமை கொடுப்பவர்.

இந் நிகழ்வில் ஆரம்ப காலத்தில்   உதைபந்தாட்டத்தில் சிறுவர்களையும்  இளைஞர்களையும்  ஈடுபடுத்தி, பயிட்சியும் கொடுத்து முன்னுக்கு கொண்டு வந்தவர்களான திரு.அலெக்ஸ் மகேந்திரன் (மலேசிய விளையாட்டு மற்றும் கலாச்சார மையங்களையும் உருவாக்கியவர்), திரு. சில்வெஸ்டர்(கனேடிய தமிழ் உதைபந்தாட்ட சம்மேளன வளர்ச்சிக்கு உதவியவர்), திரு. விசாகரத்தினம் இராஜசேகரம் (டொரோண்டோ புளூஸ் கழகம் ஆரம்பித்து வைத்தவர்களில் ஒருவர் ), திரு. அன்டன் சந்திரசேகரம் ( ஸ்காபரோ ரேன்சஸ் கழகத்தை உருவாக்கி ஒன்ராரியோ போட்டி நிகழ்வுகளில் பங்கு பெற செய்தார்) ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்  விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சால் கௌரவிக்கப்பட்டார்கள்.