May 02

வாட்ஸ்அப்பில் ஐ.பி.எல். ஸ்டிக்கர்கள் அறிமுகம்

வாட்ஸ்அப்பில் ஐ.பி.எல். ஸ்டிக்கர்கள் அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் நடைபெறும் இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சார்ந்த சிறப்பு ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு அதிகாரப்பூர்வ கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது. விரைவில் ஐபோன் பயனர்களுக்கும் இந்த ஸ்டிக்கர்கள் வழங்கப்பட இருக்கிறது. புதிய கிரிக்கெட் ஸ்டிக்கர்களை பயனர்கள் அவரவர் விரும்பும் கிரிக்கெட் ப்ரியர்களுக்கு அனுப்பி மகிழலாம்.

வாட்ஸ்அப் ஸ்டிக்கர் கொண்டு பயனர்கள் தங்களது கருத்துக்களை புது வழிகளில் வெளிப்படுத்த முடியும். வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றை டவுன்லோடு செய்தபின் பயனர்கள் அவற்றை வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு அனுப்ப முடியும்.


வாட்ஸ்அப் கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இவற்றை பயனர்கள் ஸ்டிக்கர் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த பேக்களில் கிரிக்கெட் சார்ந்த பல்வேறு ஸ்டிக்கர்கள் இடம்பெற்றிருக்கும். புதிய ஸ்டிக்கர்கள் சர்வெர் சார்ந்த அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. இவை வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.19.115 பதிப்பில் பெறலாம்.

ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் வரும் நாட்களில் வழங்கப்படலாம் என தெரிகிறது. கிரிக்கெட் ஸ்டிக்கர் பேக் விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்கள் டவுன்லோடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.