Jul 12

ரொரன்ரோ கிழக்கில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

 ரொரன்ரோவின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற துப்பர்ககிச் சூட்டுச் சம்பவத்தில படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிட்லான்ட் அவனியூ மற்றும் எக்ளிங்டன் அவனியூ பகுதியில் இன்று அதிகாலை 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள Tim Hortons துரித உணவகத்துக்கு வெளியே, சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதுகுப் பகுதியில் மிகவும் பாரதூரமான காயங்களுடன் காணப்பட்ட அவர் உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உயிர் பிழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக எந்த பகுதியில் அந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது என்பதனை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்த்துறையினர், தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், இது இலக்கு வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலா என்பதும் இன்னமும் தெரியவில்லை என்று கூறியுள்ள அதிகாரிகள், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.