Jul 12

யாழ்ப்பாணத்தில் ஒளிப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தார் கனேடிய உயர்ஸ்தானிகர்!

‘எனது கனவுகள், எனது திறன்கள், எனது பயணம்’ எனும் தொனிப்பொருளினாலான ஒளிப்படக் கண்காட்சி, யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக் கண்காட்சியை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தினால் பொருளாதார நிலைமாற்றத்திற்கான விசேட திறன்களை மேம்படுத்தல் எனும் கருத்திட்டத்தின் கீழ், இவ் ஒளிப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு ஆரம்பமான இக் கண்காட்சி, மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் யூடி தீபன் உள்ளிட்ட அதிகாரிகள், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தில் கற்கும் மாணவ மாணவிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.