Apr 29

இறைகுமாரன் - உமைகுமாரன் முதல் முள்ளிவாய்க்கால் வரை! - மட்டுநேசன்

புளொட் இயக்கத்துக்கென எப்போதுமே வில்லங்கமான வரலாறு உண்டு. தாங்கள் செய்தபாதகங்களை யார் தலையிலாவது சுமத்தித் தப்பிக்க முயல்வர். இது அவர்களின் பாரம்பரியம்.

அளவெட்டியில் இறைகுமாரன் -உமைகுமாரன் என இரு நண்பர்கள் இருந்தனர். விடுதலைவேட்கை நிறைந்தவர்கள். இவர்கள் தமிழ் இளைஞர் பேரவையில் அங்கம் வகித்தவர்கள்.

இவர்களில் உமைகுமாரன் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். 1977 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் சமயத்தில் தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும்(சம்பந்தன் மற்றும் ஆனந்த சங்கரி ஐயாமார் உட்பட) தந்தை செல்வாவின் சமாதி முன் நின்றுகொண்டு தமிழீழ இலட்சியத்தைக் கைவிட மாட்டோம்', என சத்தியப்கிரமாணம் எடுத்துக்கொண்டனர். அமிர்தலிங்கம் ஐயா நல்லூர் வீரகாளியம்மன் கோவிலில் உள்ள வாளை எடுத்துமூன்று தலைமுறை தலையைச் சுற்றி இதே சத்தியப்பிரமாணத்தை மீண்டும் எடுத்தார்.

(இந்தவாள் நல்லூரை ஆண்ட சங்கிலி மன்னனுடையது என கருதப்படுகிறது.)

இந்தத் தேர்தலில் சேருவில தொகுதியில் அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்பின்வாங்கிவிட்டார். கல்குடா, கல்முனை, சம்மாந்துறை, மூதூர், புத்தளம் ஆகியவை தவிரபோட்டியிட்ட சகல தொகுதிகளும் இக்கட்சியே அபார வெட்டியீட்டியது. ஆட்சியிலிருந்தசுதந்திரக் கட்சி மிக மோசமாகத் தோல்வியடைந்தாலும் தமிழரைப் பெரும்பான்மையாகக்கொண்ட தொகுதிகளில் கல்குடா தவிர்த்து தமிழர் விடுதலைக் கூட்டணியே வெற்றிபெற்றதாலும் எதிர்கட்சித் தலைவராகும் வாய்ப்பு அமிர்தலிங்கத்துக்குக் கிடைத்தது.

மொத்த நாட்டுக்குமே எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் அவரும் பல்வேறு வகையில்பணியாற்ற வேண்டியிருந்தது. - உதாரணத்துக்கு மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள்தமது கோரிக்கைகள் சிலவற்றை முன் வைத்து கூரையிலேறிப் போராட்டம் நடத்தினார்கள்.

அவர்களுடன் பேச்சு நடத்த அமிர்தலிங்கம் சென்றார். மாணவர்கள் இறங்கி வராததால் ஏணிவைத்து கூரை மீது ஏறி பேச்சு நடத்தினார். சில வாக்குறுதிகள் வழங்கினார். முடிவில் எல்லாம்சுபம். மாணவர்களும், அமிர்தலிங்கமும் கூரை வழியாக இறங்கினர். எதிர்கட்சித் தலைவர்என்றாலே கெத்துத்தானே அதன் பின்னர் தமிழீழம் எதற்கு? மாவட்ட சபை என்று மாவாட்டினர்கூட்டணியினர். தமிழீழத்துக்கான பாதையில் மாவட்ட அபிவிருத்திச் சபை தங்குமடம் என்றார்சித்தார்த்தனின் அப்பா தர்மலிங்கம். மொத்தத்தில் அரசியல்வாதிகளின் தங்காமடமானதுதமிழீழக் கோரிக்கை.

மாவட்ட அபிவிருத்தி சபையின் பிரமாதங்களை யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்தசந்திப்பொன்றில் விளக்க முனைந்ததார். அமிர்தலிங்கம் அங்கிருந்தோரின் சரமாரியானகேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் உன்ரை விசர்க்கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை என உமைகுமாரனைப் பார்த்துச்சொன்னார். அவர், ஓம் ஐயா... உங்களுக்கு ஓட்டுக்கு மேல இருக்கிறவங்கள இறக்கவேநேரமில்லை. இதுக்கு நேரம் கிடைக்குமே?', என்று சுடச் சுட சொன்னார் உமைகுமாரன்.கூடியிருந்த அனைவருமே சிரித்து விட்டனர். வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார்அமிர்தலிங்கம்.

இவ்வாறன வரலாற்றைக் கொண்ட உமைகுமாரனையும் அவனது நண்பன்இறைகுமாரனையும் நள்ளிரவில் கடத்திச் சென்று வயல் வெளியில் சுட்டு வீசினர் புளொட்குழுவினர். (இந்த நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய சந்ததியார் பின்னர்உமாமகேஸ்வரனுக்கு அதிக விசுவாசம் கொண்டோரால் தமிழகத்தில் காணாமலாக்கப்பட்டார்)அளவெட்டியில் செய்த படுகொலைகளை தமிழர் விடுதலை கூட்டணி மீது சுமத்த புளொட்அமைப்பினர் முனைந்தனர். மட்டக்களப்பில் இறைகுமாரன், உமைகுமாரனுக்கு அஞ்சலிக்கூட்டம் நடத்தினர். நகரசபை மண்டபத்தில் நடந்த இக் கூட்டத்துக்கு தலைமை இன்றையபிரபல சித்தாந்தவாதி யோகன் கண்ணமுத்து, பிரதம பேச்சாளர் இரா.வாசுதேவா. இவரது உரைநேரடியாக தமிழர் விடுதலைக் கூட்டணியே இப்பாதகத்துக்குப் பொறுப்பு எனச்சுட்டிக்காட்டியது.கொன்றவர்களே அஞ்சலிக் கூட்டம் நடத்துகிறார்கள் எனத்தலையிலடித்துக் கொண்டார் அமிர்தலிங்கம்.

வரலாறு மீண்டும் திரும்புகிறது. இறுதி யுத்தத்தின் இறுதிக் கணம் மட்டுமல்ல அதற்குப் பிறகும்தொடர்ந்து இலங்கைப் படையினருக்கு சேவகம் செய்யும் புளொட்டினரின் பணி புலிகள்தோற்கடிக்கப்பட்டதை கொண்டாட மாபெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தது.(அழைப்பவிடுவிக்கப்பட்டவர்களில் ஈ.பி.டி.பி. மட்டும் மறுப்புத் தெரிவித்தது) வன்னியில் தாம் இழந்தஆட்சியை மீண்டும் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் வவுனியா நகர சபையில் தனித்துப்போட்டியிட்டது. தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டது இரண்டிலும்ஏமாற்றம்தான்.

புலிகள் தோற்கடிக்கப்படுவதற்குத்தானே புளொட் தேவை. செட்டிகுளத்தில் புலிகளின்உடைமைகளை சொந்தமாக்கிக் கொள்ள முயன்றதில் படையினருக்கும் இவர்களுக்குமிடையில்முரண்பாடு வவுனியா மாவட்ட புளொட் பொறுப்பாளர் சூரி கைது செய்யப்பட்டார். படையினர்கைது செய்து விசாரணைக்கென புளொட்டிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களின் படுகொலைபற்றிய வழக்கை இவர் எதிர்கொள்ள நேர்ந்தது. இந்த வழக்கில் சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தாஆஜரானார். எப்படியோ சூரி வெளியில் வந்தார். (வழக்கின் நிலைமை தெரியவில்லை) வன்னிமக்களும் படைகளும் கைவிட்ட நிலையில் கூட்டமைப்புடன் சேருவதைத் தவிர புளொட்டுக்குவேறு வழியிருக்கவில்லை.

கடந்த ஆண்டு மே 18 நிகழ்வின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல்களை எந்தஅடிப்படையில் செய்வது என்பது சம்பந்தமான ஆரம்ப கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் அரசியல் ஆய்வாளர்கள், மத குருமார், முன்னாள் போராளிகள்,சமூக ஆர்வலர்கள் என குறிப்பிட்ட சிலர் இதில் கலந்து கொண்டனர். இதில் ஆரம்பத்திலேயேதீர்மானிக்கப்பட்ட விடயம் 2009 மே 18 வரை அரச படைகளுடன் ஒத்துழைத்த குழுக்கள்,கட்சிகளை இணைத்துக் கொள்வதில்லை என்பதாகும். பின்னர் இவர்கள் பல்கலைக்கழகமாணவர்கள் ஏனைய மாவட்ட பிரதிநிதிகளுடன் இணைந்து மேலும் பல விடயங்களைஆராய்ந்தனர்.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட குழுவினருடன்கலந்துரையாடினர். மட்டு. மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இரு பகுதியினரையும்இணைத்து ஒழுங்குபடுத்தினர். முள்ளிவாய்க்கால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்வகையில் இக் கருமங்கள் நடைபெற்றன. மேலும் தீர்மானிக்க வேண்டிய விடயங்களும்உள்ளன.

இந்நிலையில் புளொட் அமைப்பைச் சார்ந்த கனகராஜா தவராஜா என்பவர் ஒரு அறிக்கைவெளியிட்டார். இவர் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராவார். இவர் இச்சபையின்பெரும்பான்மையைப் பெற யார் யார் உதவினர்?

அரசியல் கைதிகள் என்று எவருமில்லை எனக் கையை விரிக்கும் நீதியமைச்சர் தலதாஅத்துகோறளை, படையினர் வசம் இருக்கும் காணிகளை விடுவிக்கச் சாத்தியமில்லை எனக்கூறும் ஜே.ஆரின் பேரனும் ரணிலின் மருமகனுமான ருவான் விஜயவர்த்தன போன்றோர்அங்கம் வகிக்கும் ஐ.தே.கவின் உறுப்பினர்கள் இனப்படுகொலையை நடத்தி முடித்தமஹிந்தவின் தற்போதைய குடும்பக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் துஷாராமற்றும் இன்னொருவர், மற்றும் ரெலோ சார்பானோர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைஇவ்வாண்டு தாங்களே மேற்கொள்ளப் போவதாக கனகராஜா தவராசாவின் அறிக்கையில்குறிப்பிட்டுள்ளது.

நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கும் ஐ.தே.க. மற்றும் மஹிந்தகட்சியினரின் துணையுடன் இறுதிப் போர் முடியும் வரை படையினரின் எடுபிடியாக இருந்தகட்சியினரின் தலைமையில்தான் இந் நிகழ்வு நடைபெறவுள்ளதாகத் தெரியவருகிறது.

இறைகுமாரன் உமைகுமாரன் படுகொலைக்கு புளொட் மட்டக்களப்பில் அஞ்சலிக்கூட்டம்நடத்திய போது கொலை செய்தவர்களே அஞ்சலி செய்கிறார்கள் என வெளிப்படையாகக்கூறும் தைரியம் அமிர்தலிங்கத்துக்கு இருந்தது. இறைகுமாரன் - உமைகுமாரன் படுகொலைகுறித்த உண்மை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கும் தெரியும். இறுதியுத்தம் வரை புளொட் எப்படி இயங்கியது? யார் யாரைக் கொன்றது? யுத்த வெற்றியை எப்படிக்கொண்டாடியது என்பதுவும் அவருக்குத் தெரிந்திருக்கும் இறுதி யுத்தத்தில் தனது இருபிள்ளைகளை இழந்த முன்னாள் போராளியொருவர் கரைதுறைப் பற்று பிரதேச சபை யார் யார்தயவுடன் இயங்குகின்றது என்பதையெல்லாம் அவருக்குச் சுட்டிக் காட்டியுள்ளார். அவரதுகருத்தை மாவையும் ஒப்புக்கொண்டுள்ளார். தான் அதனைப் பார்த்துக் கொள்வதாக வாக்கும்அளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்ஒருவரிடம் இது தொடர்பாக உரையாடியுள்ளார். அவர் பிரதேச சபை இதனை நடத்துவதுபொருத்தமில்லை என்பதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. மயானம் என்ற வகையில் இதுஅவர்களிடம் கையளிக்கப்பபட்டாலும் உரித்துடையவர்களே உறவுகளுக்குக் கடமை செய்யவேண்டுமே தவிர மயானக்காரன் தானே பொறுப்பேற்று கடமைகளைச் செய்ய முடியாதுஎன்பதும் அவரது அபிப்பிராயம் போலுள்ளது. இன்னொரு எம்.பி. நான் சொல்வதை ஒருவருமேகேட்கிறார்கள் இல்லையே அபிவிருத்திக் கூட்டங்களுக்கும் நான் போவதை விட்டுவிட்டேன்என்று கூறுகிறார்.

இனி நிகழ்வு நடத்த பொலிஸ் தடை விதிக்கலாம். அந்தச் செய்திக்கு கீழே அதை எதிர்த்துவாதிட சுமந்திரன் வருகிறார் என்றும் வரலாம். ஆபத்பாந்தவனும் நானே அனாதரட்சகனும்நானே என்ற இவ்வாறன அரசியல் சித்து விளையாட்டுக்கள் நாம் ஏற்கனவே கண்டகாட்சிகளே.

எப்படியோ உயிரிழந்த எமது உறவுகளை கொச்சைப்படுத்துவதாக எதுவுமே நடக்க கூடாதுதமிழரசு மற்றும் ரெலோ கட்சித் தலைவர்கள் இந்த விடயத்தில் தீர்க்கமான முடிவெடுக்கவேண்டும்.

இக் கட்டுரையின் முதல் பந்தியை மீண்டும் படியுங்கள்.