Mar 25

5 மாணவர்கள் விவகாரம்; கடற்படையின் ஹெட்டியராச்சியை கைது செய்ய உத்தரவு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்றது தொடர்பில் கடற்படையின் லெப்டிடன் கமாண்டர் தர அதிகாரியான பிரசாத் ஹெட்டியராச்சியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கில் நிரபராதி என கருதப்பட்டு விடுதைல செய்யப்பட்விடுதலை    லெப்டினன் கமாண்டர் பிரஸாத் ஹெட்டியராச்சியையே கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே லெப்டினன் கமாண்டர் சம்பத் முனசிங்க, சமித் ரணசிங்க பிரதான கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, ஆகியோர் கைது செய்யப்படடிருக்கின்ற நிலையிலேயே நேற்று பிரசாத்  ஹெட்டியராச்சியை கைது செய்ய உத்தரவு பிப்பிக்கப்பட்டது.