Mar 25

புதிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஐ.நாவுக்கு 3,62,000 டொலர்

இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நாவுக்கு 3 இலட்சத்து 62 ஆயிரம் லொடர் தேவை என்று  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

ஐ.நாவின் புதிய தீர்மானத்தை 2018 முதல் 2019 வரையிலான காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கே இந்த நிதி தேவைப்படுகின்றது என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

புதிய தீர்மானத்தின்படி ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைச்  சேர்ந்தவர்கள் இலங்கைக்கு 6 விஜயங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

அவர்கள் இலங்கைக்கான ஒவ்வொரு விஜயத்தின்போதும் 14 நாட்கள் தங்கியிருப்பர் எனவும் அவர் கூறியுள்ளார். 

இதற்காக 3 இலட்சத்து 62 ஆயிரம் டொலர் தேவைப்படுகின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.