Apr 25

இலங்கை பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் வௌியிட்டுள்ள தகவல்!

இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகள், வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

சீ.பீ.எஸ் ஊடகத்துக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பாங்கிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.இந்த தாக்குதலின் அளவானது, பிரிதொரு குழுவின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது என்பதை புலப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்சியாக விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில், தாக்குதல்தாரிகளின் வலையமைப்பு குறித்த விபரங்கள் விரைவில் திரட்டப்படும் என்றும் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.