Jul 11

கணவருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க... மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்!!!

சீறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள கணவருக்கு தனது சீறுநீரகத்தை தானமாக கொடுக்க முடிவு செய்துள்ள மனைவி, அந்த விடயத்தை கணவரிடம் கூறிய விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Knoxville நகரை சேர்ந்தவர் Steve Winfree. இவர் மனைவி Heather. Steveக்கு கடந்த 14 வருடங்களாக சிறுநீரகம் சம்மந்தமான பிரச்சனை இருந்துள்ளது.

மேலும், கடந்த நவம்பரிலிருந்து Steve டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். இந்நிலையில், Steveவுக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து Steveன் மனைவி Heather தனது சிறுநீரகம் கணவருக்கு பொருந்துமா என மருத்துவ சோதனை செய்ய, சிறுநீரகம் பொருந்துவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான விடயத்தை கணவருக்கு வித்தியாசமான முறையில் சொல்ல நினைத்த Heather, Steveக்கு பிடித்த பேஸ்பால் விளையாட்டு வீர்ர்களின் புகைப்படம் இருக்கும் வாழ்த்து அட்டையின் உள்ளே தனது சிறுநீரகம் Steveக்கு பொருந்தும் எனவும், தான் அதை கொடுக்க இருப்பதாக எழுதி கணவரிடம் கொடுத்துள்ளார்.

இதை Steve பிரித்து பார்த்து மகழ்ச்சியடைந்தார். இந்த தருணத்தை Heather வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.இது குறித்து Heather கூறுகையில், இந்த விடயத்தை போனில் கணவரிடம் கூற விரும்பவில்லை. அதனால் தான் நேரில் வித்தியாசமான முறையில் கூறியதாக தெரிவித்துள்ளார்.

Steve கூறுகையில், Heather என்னை வீடியோ எடுக்கவே மாட்டார். நான் அட்டையை பிரித்து படிப்பதை அவர் வீடியோ எடுக்கும் போதே, சிறப்பான விடயம் ஏதோ அதில் உள்ளது என நினைத்தேன் என கூறியுள்ளார்.

மேலும், என் மனைவி எனக்கு சிறுநீரகம் கொடுப்பது என்பது உண்மையில் மகிழ்ச்சியான விடயம். என் மரணம் வரை Heather மீதான காதல் தொடரும் எனவும் இதற்கு மேல் அவரை எப்படி காதலிப்பது என தெரியவில்லை எனவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.