Apr 25

வெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர் கைது

நாட்டில் நேற்று  இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை, வவுனதீவு, றக்வானை, பண்டாரகம உட்பட 9 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே குறித்த 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு நேரங்களில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் பலர் கைது செய்யப்படுவதுடன், சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து.