Mar 25

பா.ஜ.க.விற்கு வந்த எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடகாவில் பிரசாரம்

காங்கிரஸில் முதல்வர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்த எஸ்.எம்.கிருஷ்ணா ஜனவரி மாதம் காங்கிரஸில் இருந்து விலகியிருந்தார்.

இந்நிலையிர் அவர் தற்போது பா.ஜ.க.வில் இணைந்து  கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.

இதற்கு முன்னோட்டமாக  எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி நடைபெறும் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவான பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

இதன்போது மைசூர் மாகாணத்தைப் பூர்வீகமாக கொண்ட கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் 4 ஆண்டு கால ஆட்சியின் குறைகளை வெளிப்படுத்தவுள்ளதாக தெரியவருகின்றது.