Mar 24

ஆந்திரா விவகாரத்தில் சந்திரபாபுவை சாடும் எம்.எல்.ஏ.ரோஜா

ஒருங்கிணைந்த ஆந்திராவை இரண்டாக பிரித்தவர் சந்திரபாபு நாயுடு என நடிகையும் எம்.எல்.ஏ.வுமான ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சிறப்பு அந்தஸ்து குறித்து பேச ஆளும் கட்சி ஏன் பயப்படுகிறது? இதுகுறித்து விவாதிக்க முடியாது என கூறுவது அவமானம். மாநிலத்தை பிரிக்கக் கூடாது என 5 கோடி மக்கள் ஒருபுறம் போராடும்போது, சந்திரபாபு நாயுடு தனக்கு இரு மாநிலமும் இரு கண்கள் எனக்கூறி, மாநிலத்தைப் பிரிக்க ஒப்புதல் கடிதத்தை மத்திய அரசுக்கு வழங்கினார். மாநிலத்தைக் இரண்டாக்க அவர் ஒத்துழைப்பு கொடுத்தார்.

தேர்தலுக்கு முன் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என பாஜகவும் 15 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவேன் என சந்திரபாபு நாயுடுவும் முழங்கினர். ஆனால் தற்போது இது குறித்துப் பேச முடியாது என முதல்வர் கூறுவதில் என்ன நியாயம் என்றார்.