Apr 23

வழமைக்கு திரும்பிய கிண்ணியா!


நாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் நேற்று பள்ளிவாயல்களில் பொலிஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் சந்திகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

கிண்ணியாவில் நேற்று மாலை 5.00 மணியளவில் கடைகளை மூடுமாறு வீதியோர வியாபாரிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால் வீதியோர வியாபாரிகள் வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இன்று கிண்ணியாவில் வழமை போன்று கடைகள் திறக்கப்பட்டு வழமை போல வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.