Apr 22

இலங்கையில் தொடரும் பதற்ற நிலை! களமிறங்கினார் அமெரிக்கா ஜனாதிபதி

இலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவனமெடுத்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள அவசர நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி உரையாடியுள்ளார்.

பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடிக்க என்றும் அமெரிக்கா உதவும் என அவர் உறுதியளித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றைய தினம் திட்டமிட்ட வகையில் பல்வேறு தேவாலயலங்கள் உட்பட பல இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி விரிவாக கலந்துரையாடியுள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முழுமையான ஆதரவினை வழங்க அமெரிக்க ஜனாதிபதி தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் அமெரிக்க பிரஜைகள் உட்பட 40 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.