Jul 11

டொரொன்டோ நகரின் போக்குவரத்து உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு மாகாண மத்திய அரசுகள் நிதி உதவி

டொரொன்டோ நகரின் போக்குவரத்து உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு மாகாண மத்திய அரசுகள் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன.

மத்திய அரசு $ 5 பில்லியன் அளவான தொகையை வழங்க முன்வந்துள்ளது. ஆனால் மாகாண அரசும் இதற்கு இணைவாக  நிதி ஒதுக்கிடு செய்யவேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

ஒன்ராரியோ மாகாண உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக மத்திய அரசு $ 8.34 பில்லியன் அளவான தொகையை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் அமர்ஜீத் சோஹி அவர்கள் தெரிவித்துள்ளார். இதில் அரைவாசிக்கும் மேலான தொகை டொரொன்டோ நகரிற்கே செலவிடப்படும்.

மாகாண அரசின் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஒன்ராரியோ மாகாண உட்கட்டமைப்பு அமைச்சர் பொப் சியாரெல்லி கருத்து எதுவும் தெரிவிக்காத பொழுதும், ஒன்ராரியோ மாகாணம் மத்திய அரசுடன் இது தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.