Jul 11

டொரொன்டோ வீட்டு விலைகளில் ஆச்சரியமூட்டும் வீழ்ச்சி –மாகாண அரசின் கொள்கை மாற்றம் காரணமா?

கடந்த ஜூன் மாதத்தில் டொரொன்டோ வீட்டு விலைகளில் ஆச்சரியமூட்டும்  வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் விடுகளின் விற்பனையில் 37.3 % வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக டொரொன்டோ நகர வீட்டு விற்பனை முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சராசரியாக $ 920,000 ஆக இருந்த விட்டு விலைகள் தற்பொது $ 800,000 ஆகக் குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் 21 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒன்ராரியோ மாகாண அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட “வீடுகளை கொள்வனவு செய்யும்  வெளி நாட்டினர்க்கான 15% வரி” என்ற விதியின் பின்னரே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.