Apr 22

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம்


நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக மூவர் அடங்கிய விசேட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது. 

உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோன் ஆகியோரும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.