Apr 22

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் பலி - அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல்!

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று காலை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

450 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மரபனா உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டறிந்தார். 

இந்நிலையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா, கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் அளித்த தகவலின்படி, மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் ஆவர். 

மேலும் தகவல்களுக்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிஎஸ் ரஸீனா(58) என்ற பெண் துபாயில் செட்டில் ஆகிவிட்டார். அவரும் இலங்கை தாக்குதலில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.