Apr 21

தனியார் வைத்தியசாலைகள் இலவசமாக சிகிச்சையளிக்க இணக்கம்


நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும், சத்திர சிகிச்சைகளை செய்யவும் தனியார் வைத்தியசாலைகள் இணக்கம் தெரிவித்துள்ளன. 

காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்குமாறு தனியார் வைத்திய சங்கங்களிடம் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன முன்வைத்த வேண்டுகோளிற்கு அமைய அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பணத்திற்கு அடிமையாகாமல் தனது வேண்டுகோளினை ஏற்று அதற்கு இணக்கம் தெரிவித்தமைக்கு சுகாதார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளனர்.