Apr 21

05 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு


அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில் கருக்கள்குளம் வாவியில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

05 வயதுடைய, ரலபனாவ கல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ரணசிங்க ஆரச்சிலாகே தினேஷ் பிரியந்த என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். 

தனது மூத்த சகோதரி மற்றும் மேலும் சிலருடன் இணைந்து நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

சடலம் தற்போது அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.