Apr 20

வவுனியாவில் இரண்டு மணித்தியாலத்தில் 20 மேற்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு…

வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (20.04) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20 க்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது..

வவுனியா நகரசபை வீதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுமார் இரு மணிநேரத்தில் மாத்திரம் இருபதுக்கு அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.

அதோடு பத்துக்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டு்ள்ளது.

தலைக்கவசம் சீராக அணியாமை , சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை , அதிக சத்தம் எழுப்புதல் போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே குறித்த சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.