Mar 24

28இல் வெளியாகும் பகுபலி-2 சாதனை படைத்தது

எஸ்.எஸ். ராஜமவுலி  இயக்கத்தில் உருவான பாகுபலி  படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ள பாகுபலி 2 எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் ரசிகர்களுக்கு  விருந்தளிக்க உள்ளது. 

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில்  வெளியாகிய இப்படத்தின் டிரெய்லர் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.  

மேலும் இந்தியாவில் அதிகம்  பார்க்கப்பட்ட மற்றும் அதிகம் விரும்பப்பட்ட படத்தின் டிரெய்லர் என்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளது. 

தெலுங்கில் மட்டும் இதுவரை 35 லட்சம் பார்வையாளர்களும், இந்தியில் 30 லட்சம் பார்வையார்களும், தமிழில் 6 லட்சம் பேரும்,  மலையாளத்தில் 1 லட்சம் பேரும் டிரெய்லரை கண்டுகளித்துள்ளனர்.

இந்தியில் டப்பிங் செய்யப்படும் ஒரு படம் அதிக  பார்வையாளர்களை பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். 

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு  மொழிகளில் சுமார் 6,500 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.