Jul 10

மன அழுத்தத்துடன் ஒன்ராறியோ தொழிலாளர்கள்: நஷ்டஈடு கோரி வழக்கு

வேலைப்பழு காரணமாக நீண்டகாலம் மன அழுத்தத்தை அனுபவித்ததாக நூற்றுக்கணக்கான ஒன்ராறியோ வாழ் மக்கள் சார்பில் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ மாகாண தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கோல்ட் பிளட் பார்னர் (Goldblatt partners) என்ற சட்ட நிறுவனத்தினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக மன அழுத்தம்தரும் தொழில்கள் காரணமாக இழப்பீடுகள் கோரியிருந்த போதிலும் இழப்பீடுகள் நிராகரிக்கப்பட்டதனால் பணியிடப் பாதுகாப்பு மற்றும் காப்புறுதி வாரியம் மற்றும் ஒன்ராறியோ மாகாண அரசின் தொழில் அமைச்சு ஆகியவற்றிற்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில் அமைச்சின் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘வழக்கு தொடர்பான சட்டரீதியிலான ஆவணங்களை அமைச்சு பரிசீலனை செய்து வருகின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக கருத்துக்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.