Apr 19

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏழாவது இராப்போசன விருந்தும் மூன்றாவது விருது விழாவும்


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏழாவது இராப்போசன விருந்தும் மூன்றாவது விருது விழாவும்கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபரோவில் சிறப்பாக நடந்தேறியது


 


இந்நிகழ்வில் காணொளி பரிவர்த்தனை மூலம் நாட்டு மக்களுக்கு தனது உரையை நிகழ்த்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் கௌரவ விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் பேசுகையில்,கனடா வாழ் தமிழ் மக்கள் தத்தமது நகர சபை அரசு, மாகாண அரசு, மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகளோடு தொடர்பாடல்களை ஏற்படுத்தி முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை அந்தந்த அரச மட்டங்களில் பிரகடனப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் தம்மைஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.


 


நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்காபரோ ரூஜ் பார்க் பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தனதுஉரையில், தமிழ் மக்களாகிய நாம் எம் இனத்திற்கான நீதியை வேண்டி ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் சபையுடன் மட்டும் நின்று கொள்ளாமல் ஐ. நா இன் ஏனைய சபைகளுடனும்தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.


 


நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரம்ரன் மாநகர முதல்வர் தனது உரையில் எதிர்வரும் மே மாதம், முதல்பகுதியில் பிரம்ரன் மாநகரசபையில் நடைபெறவிருக்கும் அமர்வில் முள்ளிவாய்க்காலில்இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை தான் என்பதனை பிரகடனப்படுத்தப் போவதாக தெரிவித்தார்.


 


ஸ்காபரோ ரூஜ் பார்க் மாகாண அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்  தணிகாசலம்பேசுகையில் 2009 ஆம் ஆண்டு மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போதுதான் இளையசமூகத்தினர், தாம் வாழ்கின்ற நாடுகளில் பார்வையாளர்களாக இல்லாமல் உலக அரசியலில் தம்மைஇணைத்துக் கொண்டு தமக்கான சரியான சந்தர்ப்பம் வரும்போது நம் மக்களினுடையவிமோசனத்திற்கான குரலைக் கொடுக்கத் தீர்மானித்தனர் என்று கூறினார்.


 


நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மலேசியாவின் பேராக் மாநிலத்தின் தெலுக்இந்தான் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாரிமுத்து மனோகரன் அவர்கள் தனதுஉரையில், தமிழ் ஈழத் தமிழர்களும் அனைத்துலகத் தமிழர்களும் பொருளாதார ரீதியில் தம்மைபலப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கூறினார்.


 


இந்நிகழ்வில் இயற்கைவள தொழில்நுட்ப பொறியியலாளரான கலாநிதி சிவா சிவா தயாளன் அவர்களுக்குமாமனிதர் துரைராஜா ஞாபகார்த்த விருதும், ஜொனாதன் மத்தியூஸ் அவர்களுக்குதமிழ்த் தேசிய இளம் அறிஞர்புலமைப்பரிசில்  விருதும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. 


 


ஊடக பிரமுகர்கள் சமூகப் பிரமுகர்கள் தேச உணர்வாளர்கள் மண்டபம் நிறைந்த பொதுமக்கள்ஆகியோரின் பிரசன்னத்துடன் நடைபெற்ற இவ்விழாவை தேசிய எழுச்சிப் பாடல்களும் தேசியபாடல்களும் கலந்து ஒலித்த இசை நிகழ்ச்சி நிறைவு செய்து வைத்தது.


 


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அன்றைய நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை கீழ்வரும் முகவரியில்காணலாம்.