Apr 19

சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி - ஒருவர் காயம்


குமண தேசிய வனத்தில் வைத்து சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். 

இன்று (18) மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ரவீந்திரன் எனும் குமண தேசிய வனத்தில் டிரக்டர் ஓட்டும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.