Apr 19

எதிர்கால தலைவர்களை உருவாக்கிக்கொண்டு வருகிறேன்


எனது அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை கட்சி பேதமின்றி முன்னெடுத்துவருவதை போலவே என்னை நம்பி எனது தொழிற்சங்கத்திற்கு வரும் மாற்றுத்தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை அரவனைத்தே செயற்படுவேன், மாறாக பழையவர்கள் புதியவர்கள் எற்ற வார்த்தைக்கு இடமில்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்தார். 

தொழிலாளர் தேசிய சங்கம், தொழிலாளர் தேசிய முன்ணியின் முக்கியஸ்தர்களுடன் நோர்வூட் விளையாட்டரங்கில் இன்று (18) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் 

தொழிலாளர் தேசிய சங்ஙத்தின் தேசிய அமைப்பாளர் ஜி நகுலேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.திலகராஜ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங்பொன்ணையா, பிரதேசபை உறுப்பினர்கள் போது அம்கமுவ பிரதேச சபைக்குற்பட்ட ஹட்டன் பன்மூர் தோட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர், தலைவி, உட்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், நான் இதுவரையில் கட்சிபேதம் பார்த்து அபிவிருத்தியை முன்னெடுக்கவில்லை. ஆனாலும் கட்சி ரீதியில் பணிகள் செய்வதாக கூறித்திரிபவர்கள் தொடர்பில் எப்போதும் நான் கண்டு கொள்வதில்லை. அவ்வாறே என்னை நம்பி எனது தொழிற்சங்கத்திற்கு இணைவோரையும் சம அந்தஸ்துடனே ஏற்றுக்கொள்வேன். அதே போல தொடர்ந்து எனது குடும்ப அரசியலை நடத்த ஏனைவர்களை போல நான் நினைக்கவில்லை. 

எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவத்தை மலையக சமூகத்திற்கு வழங்க மலையகத்தில் பிறந்து வளர்ந்த சமூக அக்கரைகொண்ட இளைஞர்களுக்கு களம் கொடுத்து உருவாக்கி வருகிறேன் எனவும் தெரிவித்தார்