Apr 18

இரு புகையிரதங்கள் தடம் புரண்டதில் புகையிரத சேவைகளில் தாமதம்


கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரத சேவைகளில் தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மருதானை புகையிரத நிலையத்திற்கும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்ட காரணத்தினால் இவ்வாறு புகையிரத சேவைகளில் தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்கும் சில புகையிரதங்கள் மருதானை புகையிரத நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகிலும் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. 

இதனால் மலையகத்திற்கான புகையிரத சேவைகளில் தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.