Apr 18

மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது


மொனராகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாண்டுவ மற்றும் மெதகம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சியம்பலாண்டுவ, பஹலயாய பகுதியில் ஒரு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரும் தொம்கஹவெல பகுதியில் ஒரு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் மெதகம, பக்கினிகஹவெல பகுதியில் துப்பாக்கி ஒன்றுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் சியம்பலாண்டுவ மற்றும் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.