Jul 10

137 ஆண்டு தவமா தவமிருந்த பின்னால.., வீட்டுக்கு வந்தா மகராசி தன்னால..!

கடந்த 137 ஆண்டுகளுக்கு மேலாக தவமாய்த் தவமிருந்த இரு பரம்பரையின் தலைமுறைச் சாபத்திற்கு ஒரு விடிவு வந்துள்ளது. அந்தப்பரம்பரையின் பரம்பரை தவத்திற்கு இப்போது தான் பலன் கிட்டியுள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தின் பரம்பரையில் 137 ஆண்டுகளுக்கு மேலாக பெண் குழந்தையே  பிறந்தது இல்லை. இதுவொரு சாபம் என்று அவர்கள் கருதி வந்தார்கள். இ அந்தச் சாபத்தை தகர்க்கும் விதமாக ஒரு மகராசி வந்து பிறந்தாள்.

இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பின்னர் ஒரு பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தை அந்தக் குடும்பம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது. தென்கரோலினா மாநிலத்திலுள்ள புளூப்டன் என்ற இடத்தைச் சேர்ந்த  கார்ட்டர் லூய்ஸ் செட்டல் (வயது 28) என்பவரது பரம்பரையில் பெண் குழந்தைகளே கிடையாது. கடந்த 137 ஆண்டுகளாக இவரது அப்பா உட்பட தாத்தா மற்றும் முப்பாட்டன் வரைக்கும் அதாவது நான்கு தலைமுறைகளுக்கு மேலாக ஆண் குழந்தைதான் பிறந்து வந்துள்ளன.

கார்ட்டர் லூய்ஸ் இதற்கு முன்னர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கும் ஆண் குழந்தையே பிறந்துள்ளது. இந்நிலையில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் தம்பதியரே நம்ப முடியாத வகையில், அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது, இதுகுறித்து கூறிய கார்ட்டர் லூய்ஸ், "எனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதை என்னால் நம்பமுடியவில்லை, எனது தாய்க்கு பெண் குழந்தை என்றால் கொள்ளை பிரியம், தற்போது இந்தக் குழந்தை பிறந்துள்ளதால் எல்லோரும் மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்றார்.

ஆனால், இந்த சந்தோஷத்தை கார்ட்டர் லூய்ஸ் குடும்பத்தினரைக் காட்டிலும் அவருடன் வேலை செய்யும் நண்பர்கள் மிக விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். தங்களது மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் வகையில் அவர்கள் 24 அடி உயரம் மற்றும் 24 அடி அகலம் கொண்ட அந்தப் பெண் குழந்தையின் கட்-அவுட்டை தென் கரோலினா நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிலைநாட்டி மகிழ்ந்தனர்.