Jul 10

ஸ்பெயினினூடாக ஐரோப்பா செல்லும் அகதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பு.

இந்தவருடம் ஸ்பெயினின் தென் கடற்கரையினூடாக ஐரோப்பா செல்லும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மோதல் இடம்பெறும் லிபியாவின் ஊடாக பயணிப்பதை தவிர்த்த காரணத்தினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த புதன் கிழமை முதல் இன்று வரை 8 படகுகளில் பயணித்த 380 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் மொரக்கோவில் இருந்து வருகைத்தந்த 52 அகதிகள் கொண்ட படகு கடல் கொந்தளிப்பு காரணமாக கவிழ்ந்தது.

அவர்களில் 3 பேர் மட்டுமே ஸ்பெயின் கரையோர கடற்படையினரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.