Apr 18

வடமராட்சியில் மாட்டிய வழிப்பறி கொள்ளையன்

வடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து தொலைபேசிகள், ஆவணங்கள் மீட்கப்பட்டதாக நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை (16) நெல்லியடி காவல்துறை புலனாய்வுப் பிரிவினரினால் மேற்படி பிரதான நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வடமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளையிடப்பட்ட ஆறு தொலைபேசிகள் , அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரம், வெளிநாட்டு வங்கி அட்டைகள் என்பன மீட்கப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.