Jul 10

லண்டனிலுள்ள புகழ் பெற்ற கேம்டன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

இங்கிலாந்தின் லண்டன் நகர வடக்கு பகுதியில் உள்ள கேம்டன் லாக் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 10 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 70க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

அதிஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எந்தவித உயிரிழப்போ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று லண்டன் போலீசார் தகவல் அளித்துள்ளனர். இருப்பினும் தீ இன்னும் அணைக்கப்படவில்லை என்பதால் சேத மதிப்பு குறித்து இன்னும் தெரியவில்லை.

இந்த மார்க்கெட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், ஸ்டால்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பகுதி இது. 2008ம் ஆண்டும் இந்த மார்க்கெட்டில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதன்பிறகு பல மாதங்களாக மார்க்கெட் மூடப்பட்டு கிடந்து, பிறகுதான் திறக்கப்பட்டது.