Mar 24

கடலோரப் பாதையில் இலங்கை ஓர் முக்கியமான நாடு எனக் கூறும் சீனாவின் இரண்டாவது பெரிய முதலீட்டு நா

கடலோரப் பாதையில் இலங்கை ஓர் முக்கியமான நாடு எனக் கூறும் சீனாவின் இரண்டாவது பெரிய முதலீட்டு நாடாக இலங்கையை விரைவில் மாற்றிக் கொள்ளும் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.



இலங்கையில் 2 ஆயிரம் ஏற்றுமதியாளர்களை ஸ்தாபிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்ட ஆரம்பம் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் மூலோபாய  ஏற்றுமதி முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் தலைவி இந்திரா மல்வத்த தலமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் ,

கடலோரப் பாதையில் இலங்கை ஓர் முக்கியமான நாடு எனக் கூறும் சீனாவின் இரண்டாவது பெரிய முதலீட்டு நாடாக இலங்கையை விரைவில் மாற்றிக் கொள்ளும் . இதற்காக விரைவில் 6 மில்லியன் டொலர் முதலீடும் எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் இடம்பெறவுள்ளது. இதில் ஊழல் , தரகுப் பணம்  அற்ற முறையில் முதலீடுகள் இடம்பெறும்.

இலங்கையானது கடலோரப் பாதையில் மிக முக்கியமான நாடு என சீனத் தலைவரே கூறியுள்ளார். இதேநேரம் திருகோணமலைத் துறைமுகமானது பிராந்தியத்திலேயே 2வது முக்கியம் வாய்ந்த்தாகவும் உலகில் 4வது முக்கியம் வாய்ந்த துறைமுகமாகவும் விளங்குவதும் ஏற்றுமதிக்கு உகந்த ஓர் விடயம். இதனால் உலகின் ஏற்றுமதிக்கு இலங்கையை ஓர் மையமாக மாற்றும் திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. 

இதேநேரம் இன்று புதிய ஏற்றுமதியாளர்களை ஊக குவித்தாலும் பழைய ஏற்றுமதியாளர்கள் உற்பத்ரியாளர்களும் ஊக்குவிக்கப்படுவர் இருப்பினும் சீனா , தாய்லாந்து , கொரிய நாடுகளுடன் ஒப்பிடும்போது முன்னேறும் சுபாவமானது எமது நாட்டில் இல்லை என்றே கூறவேண்டும். நீங்கள் விவசாயத்தில் மட்டும் அன்றி இலத்திரனியல் உள்ளிட்ட ஏனைய  துறையிலும் காலூன்ற வேண்டும். இதேவேளை நாட்டின் வர்த்தக மற்றும் ஏற்றுமதிக் கொள்கைகள் விரைவில் சுமார் ஒரு மாதகாலத்தில் வெளிவரவுள்ளது. இதற்கு ஐரோப்பிய யூனியன் உதவி புரியவுள்ளது.

உற்பத்திகள் , ஏற்றுமதிகளில் முயற்சித்தால் நாமும் 3 ஆண்டுகளில் தாய்லாந்து போலவும் 7 ஆண்டுகளில் கொரியா போன்றும் 10 வருடத்தில் சீனா போன்றும் வரமுடியும் ஆனால் இவ்வாறான திட்டத்திற்கும் அரசியல்வாதிகள் தடுக்க முயற்சிக்கின்றனர். இந்த நாட்டில் மக்களிற்காக செயல்படாதவர்கள் இனவாத்த்தைப் பேசுகின்றனர். இந்தியாவில் 100ற்கும் மேற்பட்ட இனம் உண்டு ஒற்றுமையாக வாழ.கின்றனர். அதனால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 விகித்த்தினையும் தாண்டி விட்டது. இதேநேரம் எமது தொடர்பாடலுக்கு மொழியும் ஓர் தடையாகவுள்ளது. என்றார்