Apr 13

அமெரிக்காவில் 73 முட்டைகளுடன் 17 அடி மலைப் பாம்பு

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் 17 அடி மலைப்பாம்பை விஞ்ஞானிகள் பிடித்துள்ளனர்.

இந்த பாம்பின் வயிற்றில் 73 முட்டைகள் காணப்பட்டுள்ளதுடன் எடை சுமார் 63.5 கிலோகிராமாகும். பிக் சைப்பிரஸ் வனப் பகுதியில் இருந்து அந்த மலைப் பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய பாம்பு இனங்களில் ஒன்றான பர்மா மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தாக இந்த பாம்பு காணப்படுகிறது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா வனப் பகுதிகளில் மலைப்பாம்புகள், ஏனைய விலங்குகளுக்கு மிரட்டலாக அமைகின்றன. அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, ஃபுளோரிடாவில் மலைப்பாம்புகளை வேட்டையாடும் போட்டிகளும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.