Apr 13

மேயர் கிண்ணம் – 2019 உத்தியோகபூர்வ ஆரம்பமானது!!!


அக்கரைப்பற்று அல்-குறைஷ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த மேயர் கிண்ணம்- 2019 மின்னொளியிலான இரவு நேர கிரிக்கட் மற்றும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று (12) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அல்-குறைஷ் விளையாட்டு கழகத்தின் தலைவர்இ சிரேஷ்ட உதைபந்தாட்ட வீரர் ஆச.ஹனீபா தலைமையில் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும்இ முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்களும்இ கெளரவ அதிதியாக அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் சகிஇ அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். றாசீக்இ அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஇ மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் அல் -குறைஷ் கழக அங்கத்தவர்கள்இ கிரிக்கட் ரசிகர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.