Mar 23

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கமுடியாது

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 99 வருடங்கள்  குத்தகைகுக்கு வழங்கினால் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்களின் நிலைமை என்னவாகும்.

டொலர்களுக்காக எமது நாட்டு மக்களின் உரிமையை தாரை வார்க்க முடியாது. அரசாங்கத்திற்குள் இருந்தாலும் பிரச்சினைகளை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் எமக்கு சீனாவை ஒருபோதும் புறக்கணித்து செயற்பட முடியாது என்றும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.