Apr 12

சுற்றுசூழல் மாசடைவை தடுக்கும் புதிய முயற்சியில் பரிஸ்!

பரிஸில் 800 மின்சார பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அதிகரித்துள்ள சுற்றுசூழல் மாசடைவை தடுக்கும் வகையிலேயே 800 மின்சார பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த பேரூந்துகள் சேவைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டீசல் பேரூந்துகளால் சுற்றுச்சூழல் மிக மோசமான மாசடைவைச் சந்திக்கிறது என தெரிவிக்கப்பட்டு, €400 மில்லியன் யூரோக்கள் செலவில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று முன்னணி நிறுவனங்களான Heuliez Bus, Bollore மற்றும் Alstom நிறுவனங்களுக்கு இந்த பேரூந்தை தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் 150 பேரூந்துகள் சேவைக்கு வரும் எனவும், 2022 ஆம் ஆண்டில் மேலதிக பேரூந்துகள் சேவைக்கு வரும் எனவும் கூறப்படுகின்றது.